சென்னை, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்த “ஒன்ஸ் மோர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான குரல் மற்றும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து நடித்துள்ள 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் கூட்டணி 'மாஸ்டர்', 'கைதி', 'விக்ரம்' போன்ற படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், பின்னர் 'அநீதி', 'ரசவாதி', 'போர்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அவர், நடிகை அதிதி ஷங்கர் ஜோடியாக 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவான படம் 'குட் நைட்' மற்றும் 'லவ்வர்' போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ரிலீஸ் தேதி அறிவிப்பு இந்த நிலையில், 'ஒன்ஸ் மோர்' படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்ட் 28 ந் தேதி திரையங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/release-date-announced-for-the-film-once-more-starring-arjun-das




