மேட்டுப்பாளையம், சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, தெற்கு ரெயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்படும் நீலகிரி மலை ரெயிலின் சிறப்பு சேவைகளை அதிகரித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026 ஜூலை 7 ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே தினசரி கூடுதல் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், ஜூலை மாதத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளிலும் கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த கூடுதல் ரெயில் சேவைகள் மூலம் நீலகிரி மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயண வசதி மேலும் மேம்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-special-services-for-the-mettupalayamooty-mountain-train




