சென்னை, நடிகர் அஜித் நடிப்பில் அடுத்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் படம் 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'மங்காத்தா 2'? ஆதிக் ரவிச்சந்திரன் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மங்காத்தா 2' திரைப்படம் உருவாகும் என தகவல் பரவி வருகிறது. அஜித்தின் மிகப்பெரிய வெற்றிப்படமான 'மங்காத்தா' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த தகவல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறுத்தை சிவாவுடன் கூட்டணி இதையடுத்து, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 'வீரம்', 'வேதாளம்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை வழங்கிய இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விரைவில் இப்படங்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/a-triple-treat-for-ajith-fans-three-films-releasing-back-to-back




