சென்னை, ஒகேனக்கல் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக கபினி அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குறிப்பாக மழையின் தீவிரத்தை பொறுத்து அந்த மாநில அரசு தண்ணீரை அதிகரித்தும், குறைத்தும் திறந்து விட்டு வருகிறது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி செய்தும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். நீர்வரத்து அதிகரிப்பு இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி தடை செய்ய வாய்ப்பு உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal




