வாஷிங்டன், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாஸ்ப்ரூக் ஹைட்ஸ்(Hasbrouck Heights) பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் அபிஷேக் விஜயகுமார், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம், இணையத்தில் சிறார் ஆபாச படங்களை அணுகிய குற்றத்திற்காக எப்.பி.ஐ. அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது மொபைல், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தபோது, 3 வயதுக் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை காட்டும் படம் உள்பட 200-க்கும் மேற்பட்ட சிறார் ஆபாச படங்கள் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில் அபிஷேக் விஜயகுமார், சட்டவிரோதமான படங்கள் தன்னிடம் இருந்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், இந்த வழக்கில் அபிஷேக் விஜயகுமார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் நிலையில், இந்த வழக்கில் விஜயகுமாருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/indian-origin-man-sentenced-to-20-years-in-prison-in-the-us-for-possessing-child-abuse-content




