தூத்துக்குடி. தூத்துக்குடி சிப்காட் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோகச் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தினநகர், அசோக்நகர், ஆசிரியர்காலனி, ராஜீவ்நகர், சின்னமணிநகர், 3-வது மைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, ஈ.பி. காலனி, ஏழுமலையான்நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புக் குடியிருப்புகள், ராஜகோபால்நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, எஃப்.சி.ஐ. குடோன் பகுதிகள், நிகிலேசன்நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாதநகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்காபரமேஸ்வரி காலனி, லாசர்நகர், ராஜரத்தினநகர், பாலையாபுரம், வி.எம்.எஸ்.நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜிநகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகர், பால்பாண்டிநகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ்நகர், என்.ஜி.ஓ. காலனி, அன்னைதெரசாநகர், பர்மா காலனி, டி.எம்.பி. காலனி, அண்ணாநகர் 2-வது மற்றும் 3-வது தெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபைநகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், கல்லூரிநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-7




