2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது. சிந்தனைச் செல்வன் - திருமாவளவன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், '"'தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?' என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார். தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். "குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக." - தவெக மீது உதயநிதி விமர்சனம் சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும். சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ எந்தச் சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ எந்தச் சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும் - ஆண்டன் செக்கோவ் (Anton Chekhov)" என்று பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/vck-sinthanai-selvan-twitter-post-about-anton-chekhov




