சென்னை ஃபீனிக்ஸ் மாலில் நேற்று மாலை 'மீசைய முறுக்கு 2' பட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சியை நேரில் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. ஹிப் ஹாப் தமிழா ஆதி நேற்று மாலை வேளச்சேரி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. பல்வேறு இடங்களிலிருந்து பயணித்து ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்வுக்கு வந்துக் கொண்டிருந்தார்கள். மேலும், இசையமைப்பாளரும், 'மீசைய முறுக்கு 2' படத்தின் இயக்குநருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியை நேரில் காணவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஃபீனிக்ஸ் மாலில் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. சென்னை பகுதியின் மிகப்பெரிய மால் எனச் சொல்லப்படும் பீனிக்ஸ் மால் நிரம்பும் அளவுக்குக் கூட்டம் கூடியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிகழ்வை ரத்து செய்யுமாறு ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பிறகு, நிகழ்வை ரத்து செய்ய ஏற்பாட்டாளர்கள் உடனடியாக முடிவெடுத்தனர். நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, "'மீசைய முறுக்கு 2' கொண்டாட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க மிகுந்த ஆவலோடு வந்திருந்தேன். View this post on Instagram A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha) ஆனால் உங்களுடைய பாதுகாப்பு கருதியும், காவல்துறையின் அறிவுறுத்தலின்படியும் என்னால் மேடை ஏற முடியவில்லை. உங்கள் கட்டுக்கடங்காத அன்பு ஒருபுறம் மகிழ்ச்சி தந்தாலும், உங்களோடு 'மீசைய முறுக்கு 2'-வை இன்று கொண்டாட முடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். `விவேக் சாரை AI மூலம் கொண்டுவர விரும்பலை' - விகடன் மேடையில் மீசைய முறுக்கு 2 குறித்து ஹிப்ஹாப் ஆதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/kollywood/meesaya-murukku-2-phoenix-mall-event-cancelled-hiphop-tamizha-aadhi-statement




