புதுவை, புதுச்சேரியில் 16ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக ரங்கசாமி கடந்த மே மாதம் 13-ந் தேதி பதவியேற்றார். பின்னர் 2 கட்டங்களாக மந்திரிகள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகரன் ஆகியோர் பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5-ந் தேதி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்த கடந்த ஜூன் 24-ந் தேதி புதுவை சட்டச பையில் இருந்து கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப் பட்டது. அதில் ஜூலை 2-ந் தேதி சபாநாயகர் தேர்தலை நடத்த அனுமதி கோரப்பட்டு இருந்தது. தற்போது அந்த கோப்பு கவர்னரின் பரிசீலனையில் உள்ளது. இன்னும் அமைதி வழங்கப்படவில்லை. இதற்கிடையே புதுவை மாநிலத்திற்கான 2026-27-ம் ஆண்டுக்கு ரூ.14 ஆயிரத்து 300 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுவையில் வருகிற 31-ந் தேதியுடன் இடைக்கால பட்ஜெட்டின் கால அவகாசம் முடிகிறது. அதற்கு முன்பாக சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் 16ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின் வந்தே மாதரம், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. சட்டமன்றத்துக்கு வந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/puducherry-legislative-assembly-session-begins



