சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 10-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்நிலையில் விடுமுறை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/what-is-the-current-price-of-ornamental-gold-in-chennai-5




