அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தொடங்கியதுதான் ஈரான் போர். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தி அமெரிக்காவிற்கு டஃப் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே நல்ல பணக்கார மற்றும் வலுவான நாடுகள். ஈரானோ பொருளாதாரத் தடைகளால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடு. ஆனால், அமெரிக்கா தந்து வரும் அனைத்துக் குடைச்சல்களையும் இப்போதும் தாங்கி வருகிறது ஈரான். மசூத் பெசெஷ்கியான் பதிவுமத்திய கிழக்கில் மீண்டுமொரு பதற்றம்: சவூதி அரேபியாவை தாக்கும் ஹூதி; 73 பேர் உயிரிழப்பு! அதிபர் பதிவு ஈரான் போர் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசு எப்போதும் போரை எதிர்த்தே வந்திருக்கிறது. அமைதியைப் பேணுவதும் பிராந்தியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதுமே மோதல்களைத் தவிர்ப்பதில் உள்ளது என்றும் நம்புகிறது. இருந்தாலும், இன்றுவரை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எப்படித் துணிச்சலாக நின்று தன் நாட்டைத் தற்காத்துக்கொண்டதோ, அதேபோல ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் செயலுக்கு முற்றிலும் வருந்தும் வரை இந்த எதிர்ப்பை முழு வீச்சில் தொடர்ந்து முன்னெடுக்கும். அத்துடன், மாண்புமிகு ஈரானிய மக்களின் உரிமைகளுக்கான காவல் அரணாகவும் அது என்றும் திகழும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/iran-president-vows-to-continue-resistance-against-aggressors




