தனது கொடுமைக்கார முன்னாள் காதலர், தன் உடல் முழுக்க டாட்டூ குத்த கட்டாயப்படுத்தியதாக ஜோக் கூறினார். வேறு ஆண்கள் தொட்டதாக அவர் சந்தேகித்த இடங்களில் எல்லாம் அவர் தனது பெயரைப் பச்சை குத்த வைத்துள்ளார். அதுகுறித்துப் பேசிய ஜோக், "உளவியல் பிறழ்வுகொண்ட, அதீத சுயமோகம் பிடித்த நபரின் பிடியில் சிக்கிக் கொண்டேன். அவர் முதலில் என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து என்னைப் பிரித்தார். உடல் முழுக்க டாட்டூ குத்த வைத்தது மட்டுமின்றி, என் பணத்தையெல்லாம் செலவழித்தார். என்னை கேரவன், கொட்டகை போன்றவற்றில் அடைத்து வைத்தார்" என தான் அனுபவித்த கொடுமைகளை விவரித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8xnd4kvz2ro




