பெர்லின், ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினின் சென்டிரல் டைகர் கார்டன் பார்க் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஒருவர் பலி இந்நிலையில், சாலையில் பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பேரணிக்குள் திடீரென கார் புகுந்தது. கார் வேகமாக மோதியதில் பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் அருகே உள்ள மரத்தில் மோதி நின்றது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/germany-car-ploughs-into-rallyparade-crowd-one-dead




