காஞ்சீபுரம், காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வது வழக்கம். தரிசனம் ரத்து இந்த நிலையில் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சனிக்கிழமையான இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடை சாற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ஆதிசங்கரர் உற்சவ விஸ்வரூபம் யாத்திரை விழாவுக்காக காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள உபநிஷத் மடத்திற்கு ஆதிசங்கரர் செல்வதால் பக்தர்கள் தரிசனம் கிடையாது என அறிவிப்பு பலகை கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் ரத்து குறித்து முன்னரே கோவில் நிர்வாகம் முறையாக அறிவிப்பு வெளியிடாததால் இந்த தகவல் தெரியாமல் விடுமுறை நாளான இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். ஆதிசங்கரர் கோவிலில் இருந்து புறப்பட்ட உடன் கோவில் உள்ளே இருந்த பக்தர்களுக்கு மட்டும் தரிசனம் அனுமதிக்கப்பட்டு, உள்ளே செல்லும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருந்தால் கோவில் தரிசன நிகழ்ச்சியை மறுநாள் வைத்துக் கொண்டிருக்கலாம் என பக்தர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/darshan-at-kamakshi-amman-temple-cancelled-for-adi-shankaracharya-festival-devotees-disappointed




