மும்பை, வரலாற்றில் முதல் முறையாக இந்தியா, ஜப்பான் இடையே டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்தியா - ஜப்பான் உறவு இந்தியாவும், ஜப்பானும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. இரு நாடுகளுக்கு இடையே தூதரக ரீதியில் உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - ஜப்பான் டி20 போட்டி அந்த வகையில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா, ஜப்பான் இடையே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டு ஒரேஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சொனா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22ம் தேதி இந்த டி20 போட்டி நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/for-the-first-time-in-history-india-japan-to-play-t20-match




