பெங்களூரு, இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்துடனும் இருப்பதாக கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ஷமி குறித்து இஷான் கூறியதாவது, ஷமியின் வயதை மட்டும் வைத்து அவரை மதிப்பிடக்கூடாது. வயது என்பது வெறும் எண் மட்டுமே.என்ற நம்பிக்கையுடன் ஷமி தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார். மேலும் இந்திய அணிக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசை ஷமியிடம் இன்னும் அதிகமாக இருக்கிறது. ஷமியின் அனுபவம், உடற்தகுதி, போட்டிக்கான ஆர்வம் ஆகியவை இன்னும் சிறப்பாக உள்ளன. என தெரிவித்துள்ளார். துலீப் கோப்பை அரையிறுதியில் மத்திய மண்டலத்துக்கு எதிராக ஷமி சிறப்பாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கிழக்கு மண்டலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் கிழக்கு மண்டலம் 159 ரன்கள் இலக்கைத் துரத்தியபோது, இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஷமியே வெற்றிக்கான ரன்களையும் எடுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/shami-keen-to-return-to-the-indian-team-ishan-kishan




