சென்னை, டேட்டிங் ஆப் உலகை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடர் வரும் அக்டோபர் 2-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள புதிய ரொமாண்டிக் வெப் தொடர் ‘லவ்’. நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடரை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். டேட்டிங் ஆப் பின்னணியில் காதல் கதை டேட்டிங் ஆப் உலகை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடரில், ஐஸ்வர்யா லட்சுமி 'தாரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் 'மேத்யூ ஜெபராஜ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலில் ‘கெமிஸ்ட்ரி’ முக்கியமா அல்லது ‘காம்பாட்டிபிலிட்டி’ எனப்படும் பொருத்தம் முக்கியமா? என்ற விவாதத்தை மையமாக வைத்து இருவருக்கும் இடையிலான இந்த கதை நகர்கிறது. சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு இத்தொடரை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ள நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடிக்கும் முதல் வெப் தொடராகவும் இதுவாகும். அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது இந்த நிலையில், ‘லவ்’ வெப் தொடர் வரும் அக்டோபர் 2-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த தொடர் வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/ott/when-will-the-web-series-love-starring-aishwarya-lekshmi-and-arjun-das-be-released-on-ott




