புதுடெல்லி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (செப்டம்பர்) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ் தான் அணிகள் இடையிலான 20 ஓவர் ஆட்டங்கள் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் செப்டம்பர் 13, 15, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டி அட்டவணையை இந்தியா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் நேற்று கூட்டாக அறிவித்தன. இந்த போட்டி தொடர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் தொடராக எடுத்து கொள்ளப்படும். ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தங்களின் உள்நாட்டு தொடர்களை இந்தியாவில் நடத்தி வருவது குறிப்பிடத்தக் கது. ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா வந்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தது நினைவிருக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/india-afghanistan-t20-series-in-delhi




