"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கும், தவெகவினருக்கும் இடையே முரண்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வீரபாண்டியன், "அரசுக்கு ஆதரவு கொடுத்தாலும் இல்லை என்றாலும் நாங்கள் அரசின் பக்கம் அல்ல, உழைக்கும் மக்கள் பக்கம், ஏழைகளின் பக்கம். பெ.சண்முகம், வீரபாண்டியன் எந்த நேரத்திலும் ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. அதேநேரத்தில் மதச்சார்பின்மை என்ற விவகாரத்தில் அரசு சரியான நிலைபாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அதில் மாறுகிறபோது நாங்கள் எதிர்ப்போம், போராடுவோம். பிற கட்சிகளின் ஆட்சியையும் சரி என்றால் ஆதரிப்போம், தவறு என்றால் விமர்சிப்போம். நீங்கள் (தவெக) 5 ஆண்டுகள் செய்யும் தவறுக்கு நாங்களா பதில் சொல்ல வேண்டும்? 'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்! அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்பு கொஞ்சம் நிதானித்து செயல்பட வேண்டும். முந்தைய திமுக ஆட்சி பற்றி எங்களிடம் கேள்வி கேட்பதே தவறு. நாங்கள் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அவ்வளவுதான். எங்கள் நூற்றாண்டு கால வரலாற்றில் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கையூட்டு பெற்றதில்லை. கையூட்டை வேடிக்கை பார்த்ததுமில்லை. ஆதவ் அர்ஜுனா எனவே, ஆதவ் அர்ஜுனா, நேரம் கிடைக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். நீங்கள் படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுவரை ஊழலுக்காக எந்தக் கம்யூனிஸ்டுகளும் தண்டிக்கப்பட்டதில்லை. எந்தவொரு நீதிமன்றத்திலும் கம்யூனிஸ்டுகள் மீது ஊழல் வழக்கு பதியப்படவில்லை" என்று பேசியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவின் கேள்வி; சிபிஐ-யின் பதிலடி; தவெக-வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே விரிசலா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/cpi-veerapandian-slams-tvk-aadhav-arjuna




