இந்திய ரெயில்வேயில் காலியாக உள்ள துணை மருத்துவ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 590 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வித்தகுதி என்ன என்ற விவரங்களை பின்வருமாறு; பணியிடங்கள்; நர்சிங் சூப்ரென்டன்ட் 365, பார்மசிஸ்ட் 118, மலேரியா இன்ஸ்பெக்டர் 43, லேப் அசிஸ்டென்ட் 31, எக்ஸ்-ரே டெக்னீசியன் 25, இ.சி.ஜி., டெக்னீசியன் 4 உட்பட மொத்தம் 590 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். நர்சிங் பணியிடங்களுக்கு இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து நர்சிங் படிப்பு முடித்து இருக்க வேண்டும். மருந்தாளுநர் பதவிக்கு பார்மசி பிரிவில் கல்வித்தகுதி பெற்று இருக்க வேண்டும். டிஜிஎன்.எம்/ பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 ( முழு கட்டணமும் திருப்பி தரப்படும்) விண்ணப்பிக்க கடைசிநாள்: 14.10.2026 கூடுதல் விவரங்களுக்கு: rrbapply.gov.in- என்ற இணையதளத்தை பார்க்கவும் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/education-and-employment/590-vacancies-in-the-railways-how-to-apply




