சென்னை, தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஓபன் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கமும், மகளிர் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கமும் வென்ற நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் அந்த அணிகளில் இடம்பெற்று சாதனை படைத்தனர். இவ்வீரர், வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், இந்திய அணிகளில் இடம்பெற்ற 10 வீரர், வீராங்கனைகளில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனிநபர் பிரிவுகளில் சவிதா ஸ்ரீ தங்கப் பதக்கமும், குகேஷ் வெள்ளிப் பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர். இத்தகைய சிறப்பான வெற்றிகள், தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் செஸ் விளையாட்டின் முக்கிய மையமாக உயர்த்துவதுடன், இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தையும் அளிக்கும். இவ்வீரர், வீராங்கனைகள் மேலும் பல புதிய சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/achievement-at-the-chess-olympiad-chief-minister-vijay-congratulates-tamil-nadu-players




