மாட்ரிட், ஐரோப்பாவில் வரலாறு காணாத அளவு கடும் வெப்ப அலை வீசி வருகிறது. ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல் உள்பட பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசி வருகிறது. காட்டுத்தீ இந்நிலையில், வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ஸ்பெயின் நாட்டில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 12 பேர் பலி அந்நாட்டின் அல்மீரியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயில் சிக்கிய 23 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காட்டுத்தீ காரணமாக 3 ஆயிரத்து 200 ஹெக்டேர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது என்று ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. மேலும், மீட்பு, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ராணுவம், தீயணைப்புத்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/spain-wildfire-kills-12-in-almeria-as-victims-die-fleeing-flames




