விழுப்புரம், விழுப்புரம் அருகே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் விழுப்புரம் அருகே வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் குமாரக்குப்பத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும், நரையூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் யார் கெத்து என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நரையூரை சேர்ந்த மாணவரின் நண்பர்களான 4 மாணவர்கள் வளவனூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர். அப்போது அங்கு வந்த குமாரக்குப்பத்தை சேர்ந்த மாணவரை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதேபோல் குமாரக்குப்பத்தை சேர்ந்த மாணவரின் ஆதரவாளர்களான 4 மாணவர்கள் நரையூரை சேர்ந்த மாணவரை வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அந்த மாணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணை இது குறித்து இரு தரப்பினர் சார்பிலும் தனித்தனியாக வளவனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-between-school-students-over-posting-reels-on-instagram-case-registered-against-8



