சென்னை, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதற்கு ஆதரவு அளிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து தி.மு.க. முடிவு செய்யும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தொகுதி மறுவரையறை தொடர்பாக தற்போது முடிவு எடுப்பது முன்கூட்டிய நடவடிக்கையாகும். மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். கடந்த முறை தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில பரிந்துரைகளையும் மத்திய அரசிடம் வழங்கியிருந்தது. மசோதா பார்த்த பிறகே அந்த பரிந்துரைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.மசோதாவின் ஒவ்வொரு அம்சத்தையும் வரி வரியாக ஆய்வு செய்து, அதன் சாதக-பாதகங்களை விரிவாக விவாதித்த பிறகே ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.மசோதாவை முழுமையாக பார்த்த பிறகே கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்” என்று கூறினார். பிரதிநிதித்துவ விகிதம் குறிப்பாக, 2026-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவில், தற்போதுள்ள 543 மக்களவை தொகுதிகளை சுமார் 50 சதவீதம் உயர்த்தி 816 தொகுதிகளாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முறையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என்றும், தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆக உயர்ந்தாலும், அதன் பிரதிநிதித்துவ விகிதம் சுமார் 7.2 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-decide-stance-on-delimitation-bill-only-after-it-is-tabled-in-parliament-r-s-bharathi




