நீலகிரி, நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பலாப்பழ சீசன் என்பதால், பலா மரங்களில் பலாப்ப ழங்கள் காய்த்து உள்ளன. இதனை சாப்பிடுவதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில நாட்களாக மரப்பாலம், இச்சி மரம், காட்டேரி பூங்கா சாலையில் உலா வருகிறது. இந்தநிலையில் காட்டு யானை காட்டேரி பூங்கா முன்பு உள்ள சாலையை திடீரென கடந்து சென்றது. அப்போது அப்பகுதியில் நின்ற சுற்றுலா பயணி களை ஆக்ரோஷமாக யானை விரட்டியது. உடனே சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர். அதோடு வாகனங்களையும் வழிமறித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையி னர் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-chases-tourists-on-the-coonoor-mettupalayam-hill-road




