Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. கடந்த சில நாள்களாக எனக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மருத்துவரை அணுகினேன். எனக்கு பால் ஒவ்வாமை இருக்கலாம் என்று சொல்லி, பால் பொருள்களைத் தவிர்க்கச் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது. இந்தப் பிரச்னை எப்படிப்பட்ட அறிகுறிகளைக் காட்டும்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு 'லாக்டோஸ் இன்டாலெரன்ஸ்' (Lactose Intolerance) என்று பெயர். அது சில அறிகுறிகளைக் காட்டும். பால் பொருள்கள் உட்கொண்ட 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரத்திற்குள் பின்வரும் பிரச்னைகள் தோன்றும். வயிற்று உப்புசம் (Bloating), வாயுத் தொல்லை (Flatulence), கடுமையான வயிற்றுவலி மற்றும் தசைப்பிடிப்பு (Cramps) போன்ற அறிகுறிகள் உடனே தெரியவரும். முகத்தில் பருக்கள் (Acne) வருவது, அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதியைச் சுற்றி எடை அதிகரிப்பது போன்றவை பிறகு தெரியவரலாம். பால் பொருள்களைத் தவிர்த்தல்தான் இந்தப் பிரச்னைக்கான முதல் தீர்வாக அறிவுறுத்தப்படும். பாலை உணவிலிருந்து 2 முதல் 3 வாரங்களுக்கு முழுமையாகத் தவிர்க்கும்போது (Complete milk removal), நோயாளிகள் நல்ல முன்னேற்றத்தை உணர்வார்கள். லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய 'லாக்டோஸ் இன்டாலெரன்ஸ் டெஸ்ட்' (Lactose Intolerance Test) என்ற மரபணுப் பரிசோதனையைச் செய்து கொள்ளலாம். பிரச்னை உள்ளவர்கள், பசும்பால், எருமைப்பால், பாலாடைக்கட்டி (Cheese), வெண்ணெய், ஐஸ்கிரீம் மற்றும் பால் பவுடர் கொண்ட தயாரிப்புகள் அனைத்தையுமே தவிர்க்க வேண்டியது அவசியம்.Doctor Vikatan: பால் குடித்தால் அல்சர் பாதிப்பு சரியாகுமா, காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா? பிரச்னை உள்ளவர்கள், பசும்பால், எருமைப்பால், பாலாடைக்கட்டி (Cheese), வெண்ணெய், ஐஸ்கிரீம் மற்றும் பால் பவுடர் கொண்ட தயாரிப்புகள் அனைத்தையுமே தவிர்க்க வேண்டியது அவசியம். இவற்றுக்குப் பதிலாக, சோயா பால் (Soy Milk), பாதாம் பால் (Almond Milk), தேங்காய்ப் பால் (Coconut Milk), ஓட்ஸ் பால் (Oat Milk), லாக்டோஸ் இல்லாத பால் (Lactose-free milk) போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். பால் பொருள்களைத் தவிர்க்கும்போது உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை ஈடுசெய்ய, கீரை வகைகள், எள் (Sesame seeds) மற்றும் சோயா பொருள்கள், மீன் போன்றவற்றையும், மருத்துவரின் ஆலோசனையோடு கால்சியம் மற்றும் வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/health/lactose-allergy-in-milk-and-dairy-products-can-you-recognize-symptoms




