சென்னை, அருண் விஜய்- முத்தையா கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு `இருளன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் 1995-ஆம் ஆண்டு வெளியான 'முறை மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அருண் விஜய், பின்னர் 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெரும் கவனம் பெற்றார். தொடர்ந்து 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாபியா', 'வணங்கான்' உள்ளிட்ட படங்களின் வெற்றியால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். சமீபத்தில் அவரது 36-வது திரைப்படமான 'ரெட்ட தல' வெளியானது. இதையடுத்து, அறிவழகன் இயக்கத்தில் நடித்துள்ள 'பார்டர்' திரைப்படம் விநியோகச் சிக்கலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தற்போது 'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'விருமன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக மிர்ணா மேனன் 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணா மேனன், இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகிறார். மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு இந்த நிலையில், அருண் விஜய்- முத்தையா கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு `இருளன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரில், “இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Presenting the first look motion poster of 'IRULAN' for you'll! … — ArunVijay (@arunvijayno1) August 12, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/first-look-motion-poster-of-the-arun-vijay-starrer-irulan-released




