ஹராரே, வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஜிம்பாப்வே கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றிபெற்றது. 2வது டி20 இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. புலாவாயோ மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முழுமையாக கைப்பற்ற ஜிம்பாப்வே போராடும். அதேவேளை, இப்போட்டியில் வெற்றிபெற வங்காளதேசமும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் கருதுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/zimbabwe-vs-bangladesh-2nd-t20i-match-on-today




