வெளிநாட்டில் பல வருஷம் வியர்வைச் சிந்தி உழைச்சிட்டு, "போதும்பா ஓடியது. இனி சொந்த ஊர்ல குடும்பத்தோட நிம்மதியா செட்டிலாகலாம்!" அப்படின்னு சந்தோஷமா இந்தியாவுக்கு பிளைட் ஏறுற ஒவ்வொரு NRI மனசுலயும் ஒரு பெரிய பயமும் தவிப்பும் ஓடிட்டேதான் இருக்கு. ஏன்னா, ஆசையா ஊருக்கு வந்து இறங்குற பலருக்கு, அடுத்தடுத்து எதிர்பார்க்காத நிதி அதிர்ச்சிகள்தான் காத்துட்டு இருக்கு! அப்படி என்னதான் தவறுகள் நடக்குது? அதிலிருந்து தப்பிக்க வழி என்ன? விரிவாகப் பார்க்கலாம். 1. சொத்து இருக்கு. ஆனா கையில் ரொக்கம் இருக்கா? வெளிநாட்டுல சம்பாதிச்ச பணத்துல பெரும்பகுதியை ஊர்ல இருக்கிற காலி மனைகள்லயும் வீடுகள்லயும் வாங்கிப் போடுறது நம்ம ஆட்களோட வழக்கம். "அப்பாடா. நாலு இடம் வாங்கிப் போட்டாச்சு, இனி நம்ம எதிர்காலம் சேஃப்!" அப்படின்னு நிம்மதியா இருப்பாங்க. ஆனா ஊருக்கு வந்த பிறகுதான் எதார்த்தம் புரியும்! பிள்ளைகளோட கல்லூரி படிப்புச் செலவுக்கோ, இல்ல மாதாந்திர மளிகைச் செலவுக்கோ கையில் ரொக்கப் பணம் இருக்காது. அவசரத் தேவைக்கு அந்த நிலத்தை உடனே விற்கவும் முடியாது; ஒருவேளை கஷ்டப்பட்டு விற்றாலும் புது வரி விதிகளின்படி கைக்கு வர்ற பணத்துல பெரும்பகுதி வரியா போயிடும்! கோடில சொத்து இருந்தும், மாதாந்திரச் செலவுக்கு வழியில்லாமல் தவிக்குறதை விடப் பெரிய மன உளைச்சல் வேற என்ன இருக்க முடியும்? 2. 'RNOR' – 2 வருஷப் பொன்னான வாய்ப்பைக் கோட்டை விடாதீங்க! வெளிநாட்டிலிருந்து நிரந்தரமா இந்தியா திரும்பும்போது, வருமான வரிச் சட்டம் உங்களுக்கு RNOR (Resident but Not Ordinarily Resident) அப்படின்ற ஒரு சூப்பர் சலுகையைத் தருது. அதாவது, நீங்க ஊருக்குத் திரும்பிய முதல் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு, உங்களோட வெளிநாட்டுச் சேமிப்பு மற்றும் வருமானத்திற்கு இந்தியாவில் வரி விலக்கு உண்டு! ஆனா, இந்த அவகாசம் முடிஞ்சுட்டா, நீங்க உலகம் முழுதும் ஈட்டும் வருமானத்திற்கு இந்தியாவுலயே வரி கட்டியாகணும். துரதிர்ஷ்டவசமா, 90% NRI-கள் இந்தப் பொன்னான 2 வருஷத்தை வீணடிச்சுட்டு, சலுகைக் காலம் முடிஞ்ச பிறகு ஆடிட்டர்களைத் தேடி அலையுறாங்க! 3. நிம்மதியான ஓய்வுக்கு 'பக்கெட் உத்தி' (Bucket Strategy)! குழப்பங்கள் எதுவுமே இல்லாம, தாயகம் திரும்பிய முதல் நாளிலிருந்தே வங்கிக் கணக்கிற்கு மாதாந்திர ஓய்வூதியம் போல பணம் வர வைக்க சர்வதேச நிதி ஆலோசகர்கள் ஒரு சூப்பர் வழியைப் பின்பற்றுறாங்க. அதுதான் 'பக்கெட் உத்தி'. உங்களோட மொத்த ஓய்வூதிய நிதியை 3 பக்கெட்டுகளாப் பிரிக்கணும்: முதல் பக்கெட் (லிக்விடிட்டி): இந்தியா திரும்பியதும் அடுத்த 2 - 3 ஆண்டுகளுக்கான மாதாந்திரச் செலவுகள் மற்றும் அவசரத் தேவைகளுக்கான பணம். ஷேர் மார்க்கெட் சரிந்தாலும் இந்தப் பணம் பாதுகாப்பா இருக்கும். இரண்டாவது பக்கெட் (வருமானம்): அடுத்த 4 - 7 ஆண்டுகளுக்கான தேவைகளுக்கு, மிதமான வளர்ச்சியோடு சீரான வருமானம் தரும் முதலீடுகள். மூன்றாவது பக்கெட் (வளர்ச்சி): எதிர்காலப் பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கக்கூடிய நீண்டகால வளர்ச்சி முதலீடுகள். இப்படிப் பிரிச்சு முதலீடு செஞ்சுட்டா, "ஐயோ ரியல் எஸ்டேட் விற்கலையே", "வரி கட்டணுமே" அப்படின்ற பயமே இல்லாம நிம்மதியா வாழலாம்! RNOR சலுகையைப் பயன்படுத்துவது முதல் பக்கெட் உத்தியை நடைமுறைப்படுத்துவது வரை பல சந்தேகங்கள் உங்களுக்கு வரலாம். உங்களுடைய ஓய்வுக்கால நிதியை மிகச் சரியாகத் திட்டமிட உதவவே ஒரு சிறப்பு ஆன்லைன் வழிகாட்டுதல் வகுப்பு (Webinar) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! இந்த வெபினார் முக்கியமாக யாருக்கானது? இன்னும் 1 முதல் 3 ஆண்டுகளில் இந்தியா திரும்பத் திட்டமிடும் NRI-கள். வெளிநாட்டு உழைப்பில் சேர்த்த பணத்தை இந்தியாவில் அசையா சொத்துகளாக வைத்துள்ளவர்கள். ஓய்வுக்காலத்தில் நிலையான மாதாந்திர வருமானத்தை வரிச் சுமையின்றிப் பெற விரும்புவோர். 'டீம் லாபம்' (Team Labham) நடத்தும் இந்தப் பிரத்யேக ஆன்லைன் வகுப்பில், NRI-களுக்கான வரி நடைமுறைகள் மற்றும் பக்கெட் உத்தி குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் நேரடியாக விளக்கம் அளிக்கிறார்கள். தலைப்பு: Retirement Planning with Bucket Strategies – An NRI Special நாள்: சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2026 நேரம்: மதியம் 12:30 மணி இந்திய நேரம் வழங்குபவர்கள்: Team Labham கட்டணம்: முற்றிலும் இலவசம்! வெளிநாட்டில் சிந்திய வியர்வைக்கு, சொந்த ஊரில் பெறப்போகும் நிம்மதியே உண்மையான பலன். உங்கள் ஓய்வுக்காலத்தை இப்போதே சரியாகத் திட்டமியுங்கள்! இங்கே கிளிக் செய்து உங்கள் இடத்தை இலவசமாக முன்பதிவு செய்யுங்கள்! Personal Finance: 5 ஆண்டுகளுக்கு மேல் யோசிக்கத் தெரியாதவர்களா நாம்? ஷேர் மார்கெட்டும் பொறுமையும் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/personal-finance/how-to-use-bucket-strategies-for-monthly-pension




