கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (வயது: 36). இவர், ராஜபுரம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் ராஜபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த கோபால் என்பவரது மகன் விபிலன்(வயது: 28) என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த வி.ஏ.ஓ அன்புராஜ், விபிலனிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விபிலன் விரும்பவில்லை. ஆனால் அன்புராஜ், 'ஒரு ரூபாய் குறைந்தாலும் வேலை நடக்காது' என்று கறாராகச் சொல்லியுள்ளார். karur இதனால், விபிலன் இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் சென்று வி.ஏ.ஓ அன்புராஜைக் கையும் களவுமாகப் பிடித்து, கைது செய்தனர். திருச்சி: வண்டல் மண் எடுக்க ரூ.4,000 லஞ்சம் - நீர்வளத்துறை அதிகாரி கைது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/karur-how-the-vao-who-demanded-a-1000-bribe-was-caught




