'வரும் 31-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது' என, கோழி வணிகர்கள் அறிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் கோழி இறைச்சி என்பது மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. 'தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 11 முதல் 12 லட்சம் பிராய்லர் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 40 சதவிகிதத்துக்கும் மேல் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன' என, தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cddj21mqe6go




