சென்னை, காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாரி என்பவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அருகே சிட்டத்தூர்கிராமத்தைச் சேர்ந்த மாரி ( எ ) ரூபன் (வயது 33) என்பவர் குற்ற வழக்கு ஒன்றில் வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் தாமரைப்பாக்கம் கூட்டு சாலைக்கு சென்று கொண்டிருந்தார், அப்போது மின்னல் வேகத்தில் எதிரே ஒரு காரில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் மாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். பட்டபகலில் நடந்த கொலை சம்பவத்தை பார்த்த நேரில் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்ப முயன்ற போது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாகல்மேடு என்ற இடத்தில்சாலை ஓரமாக இருந்தவீட்டின் சுவர் மீது கார் மோதியதில் கொலைகார கும்பலைச் சேர்ந்த 3 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து வெங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காரிலிருந்த மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூரில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாரி என்பவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-in-broad-daylight-near-thiruvallur




