திருச்செந்தூர், திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து காஞ்சிப்புரம் மாவட்டம், நாயக்கன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் கண்ணன் என்பவர் நேற்று குலசேகரபட்டினம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர், ஆறுமுகநேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். நேற்று மாலையில் வினோத் கண்ணன், லெட்சுமணன், சுதாகர் ஆகிய மூவரும் குறும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த கார் ஆறுமுகநேரியை தாண்டியதும் கட்டுபாடின்றி மின்னல் வேகத்தில் சாலையோரம் இருந்த டீக்கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. பைக் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வண்டியை மடக்கி பிடிக்க பின்னாடி வீடியோ எடுத்தப்படி சென்றனர். இதில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த சம்வத்தில் கார் ஒட்டிய லட்சுமணன் அருகில் இருந்த வினோத் கண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மூவரும் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. கார் வேகமாக சென்று நின்றுக்கொண்டிருந்த பைக் மீது மோதி நிற்காமல் செல்லுவதை அந்த டீக்கடையில் உள்ள கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது, மேலும் கார் மோதிய காட்சி மற்றும் பைக் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் கார் பின் சென்று எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/one-killed-as-car-hits-van-near-tiruchendur




