சென்னை, கேரள விபத்தில் பலியான தமிழக மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அமைச்சர் ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- சாலை விபத்து கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே பனம்பிக்குன்னு பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சூர்யா,யுவசஞ்சித், ஜீவா, சந்தோஷ், பிரசன்னா, ஜோஷூவா ஹில்சன், முரளி கிருஷ்ணன், விஸ்வா ஆகிய 8 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனைனையும் அளித்துள்ளது. இவர்கள் தங்கள் குடும்பங்களின் எதிர்கால நம்பிக்கையாகவும், உயர் கல்வி மூலம் குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்டுக் கொண்டி ருந்தவர்களாகவும் இருந்துள்ளனர். குறிப்பாக சில குடும்பங்களில் இவர்கள் முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளாக உருவாகி கொண்டிருந்தவர்கள். நிவாரணம் அந்த மாணவர்களை இழந்து நிற்கும் அவர்களது பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் அரசு உறுதுணை யாக நிற்பது. மனிதாபிமான கடமையாகும். எனவே உயிரிழந்த 8 மாணவர்களின் குடும்பங்களுக்கும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் அல்லது அரசு உரியதாக கருதும் உயர்த்தப்பட்ட நிவாரண தொகையை வழங்கிட வேண்டும். அது மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலைகளை ஆய்வு செய்து தேவையான கூடுதல் அரசு உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajeshkumar-has-requested-that-relief-be-provided-to-the-families-of-the-tamil-nadu-students-who-lost-their-lives-in-the-kerala-accident



