சென்னை, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு, போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்திருக்கிறார். நீட் தேர்வு நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினார். கைது இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பாடகர் அறிவு தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/singer-arivu-meets-chief-minister-vijay




