சாலமன் பாப்பையா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர்.திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 90 வயதான சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். வைரமுத்து இரங்கல் இந்த நிலையில், சாலமன் பாப்பையா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்; செப்டம்பர் 11 தமிழுக்கு நல்ல நாள் இல்லை போலும். கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டு சேர்த்தவர். சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த மேடைக் கலைவாணரான அவரது நாற்காலியை யாராலும் நிரப்ப முடியாது” என குறிப்பிட்டுள்ள வைரமுத்து, அவரது குடும்பத்தினருக்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார் செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும் பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா? கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக்… — வைரமுத்து (@Vairamuthu) September 11, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiah-passes-away-the-stage-artist-who-made-us-laugh-and-think-has-passed-away-vairamuthu




