திருவள்ளூர், திருவள்ளூர் அருகே பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தியை காட்டி வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்டாகிராம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஷ்வா (18), நேசகுமார் (எ) தருண் (21) மற்றும் விக்னேஷ் (18), மோகன் மகன் ஆகாஷ் (19) ஆவர். இவர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கண்ணூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டு, பொது மக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கத்தியை காட்டி மிரட்டும் வகையில் வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு அந்த வீடியோ வைரலானதையடுத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கண்ணூர் கிராமத்திற்கு சென்று விஷ்வா, நேசகுமார் (எ) தருண் (21) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவான விக்னேஷ், ஆகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-young-men-filmed-a-video-brandishing-a-knife-to-intimidate-the-public




