செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கடலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜ் (வயது 52). இவர் இன்று அதிகாலை கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். விவசாயி பலி வயல் வரப்பில் நடந்து சென்றபோது கீழே அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை நாகராஜ் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து விவசாயி நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று விவசாயி நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-farmer-dies-of-electrocution-in-field




