சென்னை, சென்னையில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்க உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், ஏராளமான வாக்காளர்களை நீக்கியதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்காக காந்தி ஜெயந்தி நாளில், ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப் போவதாக ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகளும் அறிவித்தநிலையில், அனுமதி இன்றி போராட்டம் நடத்த முயன்றதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியா கூட்டணி இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக சென்னையில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை சத்தியபவனில் காலை 11 மணியளவில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க., இடதுசாரிகள், முஸ்லிம் லீக், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த சூழலில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் முதன்முறையாக த.வெ.க.வும் பங்கேற்க உள்ளது. ஞானேஷ்குமாரை நீக்கக் கோரும் கூட்டத்தில் முதன்முறையாக த.வெ.க. சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-to-participate-in-the-india-alliance-meeting-for-the-first-time




