சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை மாநகராட்சி ஆணையாளர் ஜி. எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி ஆணையர் ஆய்வு இன்று (12.07.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளையாட்டுத் திடலில் இருந்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடி, தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை மேம்படுத்துதல், குத்துச்சண்டை பயிற்சிக் கூடம் அமைத்தல், பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைத்தல், கிரிக்கெட் வளைப் பயிற்சி அமைத்தல், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது இணை ஆணையர் (பணிகள்) செ.சரவணன், மண்டல அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-commissioner-inspects-vyasarpadi-playground




