நியூயார்க், செரீனாவுக்கு பிறகு தொடர்ந்து 4 முறை அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வீராங்கனை என்ற வரலாற்றை சபலென்கா படைத்துள்ளார். ஜெசிகா பெகுலா ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். பெகுலாவை வீழ்த்திய சபலென்கா ஆரம்பம் முதலே இருவரும் கடுமையாக போராடிய நிலையில், முதல் செட்டில் சபலென்கா 7-5 என்ற கணக்கில் வென்றார். 2-வது செட்டில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா, 6-2 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினார். முடிவில் 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறியுள்ளார். 3-வது பட்டம் சபலென்கா ஏற்கனவே 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளார். அமெரிக்க ஓபனில் தொடர்ந்து 3 பட்டங்களை வெல்வது மிகப்பெரிய சாதனையாகும். இதற்கு முன்பு கிறிஸ் எவர்ட் மற்றும் செரீனா வில்லியம்ஸ் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். யாருடன் இறுதிப்போட்டி? மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா மற்றும் கோகோ காப் ஆகியோர் மோதி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுபவர் சபலென்காவுடன் இறுதிப்போட்டியில் மோதுவார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/tennis/aryna-sabalenka-is-the-first-woman-to-appear-in-four-consecutive-us-open-finals-since-serena-williams-in-2011-2014




