லண்டன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். நெருங்கும் ரூட் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் நெருங்கி வருகிறார். இதுவரை 307 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜோ ரூட் 14,208 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் அவர் 2-வது இடத்தில் உள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க ரூட்டுக்கு இன்னும் 1,714 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. யாராலும் தடுக்க முடியாது இந்நிலையில், சச்சினின் சாதனையை ஜோ ரூட் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "வீரராக மட்டுமில்லாமல் கேப்டனாகவும் ரூட் தனது திறமையை நிரூபித்துள்ளார். கேப்டனாக ஒரு வருடத்திலேயே அவர் 1,700 ரன்கள் குவித்துள்ளார். உடல் தகுதியுடனும், கவனத்துடனும், விளையாடும் ஆர்வத்துடனும் இருக்கும் வரை சச்சினின் சாதனையை அவர் நெருங்குவதை யாராலும் தடுக்க முடியாது" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/as-joe-root-closes-in-on-sachin-tendulkars-world-record-viv-richards-gives-blunt-verdict




