சென்னை, சரன்ஷ் ஜெயின், முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணி அறிவிப்பு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைக் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்படுகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், வீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் அணியில் சரன்ஷ் ஜெயின் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 33 வயது ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின், முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். வலதுகை ஆப்-ஸ்பின்னராகவும், இடதுகை பேட்ஸ்மேனாகவும் விளையாடும் அவர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர்களுடன் அணியில் இணைந்துள்ளார். இந்தியா 'ஏ' அணி அணி அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, காலேவில் இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக இந்திய 'ஏ' அணிக்காக விளையாடிய சரன்ஷ் ஜெயின், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 4/92 மற்றும் 2/66 என மொத்தம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்ட அவர், இந்திய 'ஏ' அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்ற முக்கிய பங்காற்றினார். தற்போது அதே இலங்கை மண்ணில் இந்திய டெஸ்ட் அணிக்காக களமிறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் சாதனைகள் 2021-22 ரஞ்சி கோப்பை மத்திய பிரதேச அணி வரலாற்றில் முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய சரன்ஷ், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 57 ரன்களும் குவித்தார். 2022-23 ரஞ்சி கோப்பை இந்த தொடரில் 360 ரன்கள் மற்றும் 35 விக்கெட்டுகளை கைப்பற்றி, தொடரின் சிறந்த ஆல்-ரவுண்டருக்கான 'லாலா அமர்நாத் விருது' வென்றார். இதன் மூலம் 2024-ஆம் ஆண்டு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்திய 'ஏ' அணியில் இடம்பிடித்து, இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் விளாசினார். 2025 துலீப் கோப்பை சென்ட்ரல் ஜோன் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த அவர், இரண்டு போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி 'தொடர் நாயகன்' விருதை வென்றார். உழைப்புக்கு கிடைத்த பலன் தொடர்ச்சியான உழைப்பும், உள்நாட்டு கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டமும் காரணமாக, தற்போது இலங்கை மண்ணில் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் வாய்ப்பை சரன்ஷ் ஜெயின் பெற்றுள்ளார். டெஸ்ட் தொடர் அட்டவணை முதல் டெஸ்ட்: ஆகஸ்ட் 15 முதல் 19 வரை - காலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், காலே. 2-வது டெஸ்ட்: ஆகஸ்ட் 23 முதல் 27 வரை - எஸ்.எஸ்.சி. மைதானம், கொழும்பு. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/who-is-saransh-jain-the-33-year-old-all-rounder-who-earned-his-maiden-india-call-up




