டெல்லி, இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 2வது டி20 இந்நிலையில், இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. நாளை இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், முதல் வெற்றியை பதிவு செய்ய ஆப்கானிஸ்தானும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-t20-india-vs-afghanistan-clash-tomorrow




