சென்னை, “தூய சக்தி” என்று கூறிக்கொள்ளும் தவெக ஆட்சியில் பெண் சக்திகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கண்டிகை அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியையும், கடும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. “சக்தி” என்றாலே பெண்களைக் குறிக்கும். ஆனால், “தூய சக்தி” என்று கூறிக்கொள்ளும் தவெக ஆட்சியில் அந்தப் பெண் சக்திகளுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், உங்கள் முழக்கங்களின் அர்த்தம் என்ன? ஆட்சியின் 4-வது மாதத்திலேயே பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யாத, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாத இந்த மக்கள் நம்பிக்கையற்ற தவெக அரசை எதிர்த்து மக்களே போராடத் தொடங்கி விட்டார்கள். அதற்கான சாட்சிதான் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக செல்லும் இடமெல்லாம் வலுக்கும் எதிர்ப்புகளும், பெருகி வரும் வரலாறு காணாத குற்றச் சம்பவங்களும். தவெக மாற்றத்திற்கான அரசு அல்ல. ஏமாற்றம் கொடுக்கும் அரசு. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/pure-shakti-dmk-rule-no-safety-for-women-vanathi-srinivasan




