சென்னை, தூத்துக்குடி - நரசப்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கு கூடுதலாக 2 நிறுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தூத்துக்குடி - நரசப்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்கள் 06019/ 06020) பண்ருட்டி மற்றும் நாயுடுபேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். தூத்துக்குடியில் இருந்து திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 9.03 மணிக்கு பண்ருட்டி ரெயில் நிலையத்தில் 1 நிமிடமும், மாலை 3.18 மணிக்கு நாயுடுபேட்டை ரெயில் நிலையத்தில் 2 நிமிடமும் நின்று செல்லும். மறுமார்க்கத்தில், நரசப்பூரில் இருந்து புதன்கிழமை காலை 4 மணிக்கு புறப்படும் ரெயில், நாயுடுபேட்டையில் பகல் 12.03 மணி முதல் 2 நிமிடமும், பண்ருட்டியில் மாலை 6.11 மணி முதல் 1 நிமிடமும் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-narasapur-special-train-gets-two-extra-stops




