வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மோதல் இந்நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் (30வது ஆட்டம்) டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. அமெரிக்காவின் டெல்லஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 6 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், சியாட்டில் ஓர்காஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/major-league-cricket-texas-super-kings-vs-los-angeles-knight-riders-match-on-tomorrow




