புதுடெல்லி, இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத் தில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயமடைந்த வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டார். வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த முறையும் இடம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், கடந்த ஆட்டத்தை போலவே இந்த ஆட்டத்திலும் நிறைவான வெற்றியை எதிர்நோக்கினோம். அப்படியே அமைந்ததில் மகிழ்ச்சி. அணியில் உள்ள அனைவரும் இங்குள்ள ஆடுகளத்தன்மை மற்றும் சூழலுக்கு பழகிக் கொள்ள வேண்டும். அதே சமயம் பயிற்சியும் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் கடைசி ஆட் டத்தில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். இதுவரை விளையாடாமல் வெளியில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/opportunity-for-new-players-in-the-indian-team-for-the-final-match-shreyas-iyer




