புதுடெல்லி, டெல்லியில் நடை பெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளின் கீழ், கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலின் வரைவுப் பிரசுரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் காலெக்கெடு நிறைவடையவிருந்தது. டெல்லி தலைமைத்தேர்தல் அதிகாரியின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறிவிப்புகள் மற்றும் முறையீடுகளை விசாரித்து முடிவு செய்வதற்கான காலக்கெடு நவம்பர்30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/voter-list-revision-work-extension-till-oct-30




