டெல் அவிவ், துபாயில் இருந்து 174 பயணிகளுடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பிளைதுபாய் நிறுவனத்தின் விமானம் ஒன்று கடந்த 30-ந்தேதி சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் விமானியான இந்தியாவை சேர்ந்த ஸ்மித் மச்சாரை துணை விமானி கத்தியால் குத்தியதாக தெரிகிறது. அத்துடன் விமானத்தையும் தரையில் மோதி தகர்க்க முயன்றார். இதனால் விமா னம் 34 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 17 ஆயிரம் அடிக்கு மேல் கீழே வந்தது. எனினும் ரத்த வெள்ளத்தில் போராடிய விமானி ஸ்மித் மச்சார், காக்பிட்டை (விமானி அறை) திறந்து பயணிகளை உள்ளே வரவைத்து துணை விமானியை கட்டுப்படுத்தச் செய்தார். பின்னர் பயணிகள் உதவியுடன் விமானத்தையும் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கச்செய்தார். வீடியோ காலில் பேசிய மோடி இதனால் பயணிகள் உள்பட விமானத்தில் இருந்த 182 பேரும் உயிர் தப்பினர். துணை விமானியின் தாக்குதலில் காயமடைந்த ஸ்மித் மச்சார், அபுதாபியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் நேற்று முன்தினம் பிரதமர் மோடி செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி, விமானத்தையும் பயணிகளையும் பாதுகாத்ததற்காக பாராட்டு தெரிவித்தார். இந்தசெயலால் தேசமே பெருமை கொள்வதாக புகழ்ந்தார். உண்மையான ஹீரோ இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஸ்மித் மச்சாரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, “நீங்கள் இந்தியா, இஸ்ரேல் மக்களுக்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் உண்மையான ஹீரோ” என்று புகழாரம் சூட்டினார். மேலும், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஸ்மித் மச்சார் சிறப்பு தீபம் ஏற்ற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து நெதன்யாகு கூறுகையில், “இது இஸ்ரேல் சுதந்திர தினத்தில் வழங்கப்படும் மிக உயர்ந்த கவுரவமாகும். வழக்கமாக இந்த கவுரவம் இஸ்ரேல் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால், இந்த விஷயத்தில் இஸ்ரேல் மக்கள் அனைவரும் உங்களை அன்புடன் அரவணைத்துக் கொள்வார்கள்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/netanyahus-call-with-hero-flydubai-pilot-ends-with-invite-for-him-and-pm-modi




